Wednesday, February 6, 2013

மந்திரியும் அவரது (மானமுள்ள) மனசாட்சியும்

செய்தி:

மத்திய அரசு, 70% எண்ணையை இறக்குமதி செய்து, அதனை பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக வினியோகம் செய்கிறது. இந்த நிறுவனங்களின் வருவாய் இழப்பை சரி செய்வதற்க்காக, இரட்டை முறை டீசல் விலையை அறிவித்திருக்கிறது. அதன் படி,

சில்லரை விற்பனையில் 1லி. டீசல் ரூ.50.68 (0.55பை. அதிகரித்து)-க்கும், மொத்தமாக வாங்குபர்களுக்கு 1 லி. டீசல் ரூ. 60.95 (ரூ.11.81 அதிகரித்து)-க்கும் விற்கப்படுகிறது.

இதனால் தமிழக அரசு போக்குவரத்திற்கு, ஒரு நாளைக்கு தோராயமாக 2 கோடி வரை கூடுதல் செலவுபிடிக்கும்.  இந்தச் செலவைக் குறைக்க, அரசு பேருந்துகள் தனியார் விற்பனை நிலையங்களில் எண்ணை நிரப்புகின்றன.

இதுகுறித்த நம் கேள்விகளுக்கு ஒரு மந்திரியும் அவருடய மனசாட்சியும் அளித்த பதில்கள்:
 
ஏன் இந்த விலையேற்றம்?

மந்திரி (ம):
பொதுத்துறை எண்ணை நிறுவனங்களுக்கு கடந்த 9 மாதங்களில் மட்டும் ரூ. 1,70,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிறுப்பதால் அதனை சரி செய்யவே இந்த விலை ஏற்றம்.

மந்திரியின் மனசாட்சி (ம.ம): ஆனா நஷ்டம் கிடையாது; போனவருட நிகர லாபம் 4,000 கோடின்னு பேப்பர்ல படிச்சும் கூட கேக்கிறாம் பாரு டீட்டெய்லு . . .

மத்திய மற்றும் ஏழை மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப் படுவார்களே?

ம: நம்முடைய பொருளாதாரம் சரிந்துவிடாமல் இருக்க நாம் இதனை தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். நாம் நம்முடைய பொருளாதாரத்தை உயர்த்தாவிட்டால் அன்னிய நிறுவனங்கள் நமது நாட்டில் முதலீடு செய்யாது.

ம.ம: யாரக்கேட்டாலும் துபாய்ல இருந்து பணம் வருதுங்கரா சிங்க்பூர்ல இருந்து வருதுங்கரான். ஏன் நம்ம நாட்ல பணமே இல்லியா?

அந்நிய முதலீட்டைப் பெற இந்த அரசு என்ன முயற்சி செய்துள்ளது?

ம: அன்னிய முதலீட்டை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த ஆண்டு மட்டும் ரூ. 1,70,000 கோடியை தனியார் நிறுவனங்களுக்கு மானியமாக தந்துள்ளோம்.

ம.ம: இந்த நிதிய வச்சு நதிகளை இணைச்சா விவசாயம் பெருகும். வருமை ஒழியும். ஆனா அரசியல் ?

அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்தால் ஏழைமக்களின் வாழ்க்கையை எந்த அளவு உயரும்?

ம. அந்நிய நிறுவனங்கள் வந்ததால இப்ப எல்லோரும் செல்போன் பயன்படுத்றாங்க. இன்னும் பல நிறுவனங்கள் இந்தியாவில தொழில் தொடங்க ஆர்வமா இருக்காங்க. அவங்களும் வந்தா நாம எங்கியோ போயிடுவோம்.

ம.ம: இந்தியாவையும் அதன் இறையான்மையையும் என் உயிரைக் கொடுத்தேனும் பாதுகாப்பேன் -னு சத்தியப் பிரமாணம் எடுத்துக்கிட்டு பதவிய காப்பாத்திக்க இப்ப நாட்டையே அடமானம் வெக்கப் போறேன்.

இந்த அரசுக்கு ஏழை மக்களை முன்னேற்றத்தில் அக்கரை இல்லையா?

ம: நமது நிதி அமைச்சர் அவர்களின் முயற்சியால் சாப்பாடிற்கே வழியில்லாவன் கூட பட்டப் படிப்பு படிக்க முடிகிறது. இதற்காக ஆண்டுதோறும் ரூ. 1,00,000 கோடியை மத்திய அரசு செலவு செய்கிறது.

ம.ம: படிக்க வச்சு அவனையும் அந்நிய முதலாளிகளுக்கு அடிமைதான் ஆக்கப்போறோம். இந்தியா எப்படி வல்லரசாகும்? சோத்துக்கே அந்நிய நாடுகளை எதிர்பாத்து நிக்கப்போறோம்.

குறிப்பு-1 தகவல்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சி கோபண்ணா ஒரு தொ.கா. பேட்டில சொன்னது. கேள்வி நான் கேக்க நினைச்சது.

குறிப்பு-2 அவரின் கூற்றுப்படி இந்தியாவில் தான் டீசல் விலை குறைவாக உள்ளது.

No comments:

Post a Comment