Monday, January 28, 2013

விஸ்வரூபம்



கமலின் விஸ்வரூபம் திரைப்படம் சமூக நல்லிணக்கத்தை கெடுத்துவிடும் என முஸ்லீம்கள் எதிர்ப்பதால், அதனை தமிழகத்தில் தடை செய்துள்ளது தமிழக அரசு.

நேற்று 24.01.2013 இரவு 10.00 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேர்படப் பேசு நிகழ்ச்சியை பார்த்த பிறகு,

எனக்குத் தோன்றியவை
 
  • கமலின் விஸ்வரூபம் திரைப்படத்தை எதிர்த்து போராடக் காரணம் அப்படத்தில் தீவிரவாதிகளை முஸ்லீம்களாகக் காட்டியிருப்பது.
  • திருக்குர்ஆன்-னைப் படிப்பவர்கள் தீவிரவாதியாக இருக்கவே முடியாது - பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
  • இனிமேல் யாரும் தீவிரவாதிகளை முஸ்லீம்களாகக் காட்டி படமே எடுக்கக் கூடாது. (இதுவரை ஏதாவது தீவிரவாத இயக்கத்தை உங்கள் மதத்தை விட்டு தள்ளி வைத்திருக்கிறீர்களா ?)
  • தாலிபான் தீவிரவாதிகளுக்கு தமிழ்நாட்டு முஸ்லிம் உதவி செய்வது போன்று காட்சி அமைக்கப் பட்டிருப்பதால் எங்களை பக்கத்து வீட்டு இந்துக்கள் தவறாக எண்ணுவார்கள்.
  • மொத்தத்தில் முஸலிம்-னாலே தீவிரவாதிதான் என்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது.
எனது புரிதல்கள்

மற்ற மாநிலங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் வேறு தமிழக முஸ்லீம்கள் வேறு
தமிழகத்தில் மட்டும் தான் அண்ணன்-தம்பி, மாமன்-மச்சான் உறவுமுறையில் பழகுகிறார்கள் (தமிழர்களுடன்)

எனது சந்தேகங்கள்

பாக்கிஸ்த்தான் புனிதப் போராளிகள் இரண்டு இந்திய வீர்களைக் கொன்று கழுத்தை அறுத்த போது நீங்கள் ஏன் போராட்டதில் இறங்கவில்லை ?

(கடும் கண்டனம் தெரிவித்திருப்பதாக திரு. பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் சொன்னார். ஆனால் அதுபற்றிய செய்தி அவர்களது வலைத்தலத்தில் இல்லை.)

இரண்டு உயிரைவிட நமக்கு சினிமாவை எதிர்பதுதானே தானே முக்கியம். (யாருக்கோ விசுவாசத்தை காட்டி எங்களை காயப்டுத்தி விட்டீர்கள். கூடுதல் இடங்கள் கிடைக்களாம் !)

சரி எங்களுக்காக போராட வேண்டாம். மலாலா-வுக்காக குரல் கொடுத்தீர்களா?

திருக்குர்ஆன் "இஸ்லத்திற்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கும் எதிரான கருத்துக்களை பரப்பும் மக்கள் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும் எனச் சொல்கிறது" - மலாலாவைச் சுட்ட புனிதப் போராளி

அது பற்றிய ஒரு கேள்வி-பதில் பகுதி

அதனால,
 
மும்பை தாக்குதல், பார்லிமெண்ட் தாக்குதல் மற்றும் மேற்சொன்ன சம்பவங்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

இனிமேல் சினிமாவில் தீவிரவாதிகளை முஸ்லீமாக காட்டக்கூடாது.

No comments:

Post a Comment